மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் சார்பாக ஏழைக் குடும்பங்களுக்கு ரமலான் கிட் 2022 விநியோகம்.
புளியங்குடியில் தமுமுக அறக்கட்டளையின் கீழ் செயல்படும் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் சார்பாக கடந்த ஐந்து ஆண்டுகளாக நோன்பிருப்போம் உணவளிப்போம் என்ற திட்டத்தின் மூலமாக நோன்பிருக்கும் ஏழைக் குடும்பங்களை கண்டறிந்து ரமலான் முழுவதும் அவர்களுக்கு உணவு தயாரிப்பதற்கு தேவையான மளிகை பொருள்கள் (ரமலான் கிட் 2022) மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலில் வைத்து தயார் செய்து விநியோகம் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஜமாத் தலைவர் எம்.எஸ்.அப்துர் ரஹ்மான், ஜமாத் செயலாளர் ஏ.அப்துல் மஜீத், ஜமாத் துணைத்தலைவர் என்.மைதீன், தமுமுக நகர செயலாளர் சாகுல் ஹமீது, தமுமுக பொருளாளர் லெப்பை மைதீன், மஸ்ஜிதுர் ரஹ்மான் துணைச் செயலாளர் இக்பால், மஸ்ஜிதுர் ரஹ்மான் உறுப்பினர் எம்.எஸ்.ஹமீது, மௌலவி ஹாஃபிழ் உமர் பாரூக் உமரி மஸ்ஜிதுர் ரஹ்மான் அட்மின் சுலைமான், மமக நகர செயலாளர் மட்டன் செய்யது மற்றும் சகோதர் இப்ராஹிம், அசன், மைதின், பக்கீரப்பா மற்றும் நிர்வாகிகள் நோன்பு வைத்திருக்கும் குடும்பங்களை வீடு தேடி சென்று பொருள்களை ஒப்படைத்தனர்.