தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாண வியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கியதை தொடர்ந்துஅதன் நேரடி காணொளி காட்சி அரியலூர் மேல்நிலை ப்பள்ளியில் ஒளிபரப்பப்பட்டது.

பள்ளியில் நடைபெற்ற நேரடி காணொளி காட்சி நிகழ்ச்சியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாவட்டத்திலுள்ள 64 அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் மேல் நிலைப்பள்ளிகளில் பயிலும் 3,306 மாணவர்கள், 3,582 மாணவியர்கள் என மொத்தம் 6,888 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் வண்ணம் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், சி.எஸ்.ஐ மேல்நிலைப் பள்ளி, நிர்மலா (பெ) மேல்நிலைப் பள்ளி மற்றும் அரியலூர் அரசு மேல் நிலைப்பள்ளிகளை சேர்ந்த 778 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு,மாவட்டகலெக்டர்பொ.இரத்தினசாமி தலைமை தாங்கினார். முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் பி. கவிதா வரவேற்றார். இந்நிகழ்வில் பள்ளியின் பிடிஏதலைவர் இரா.முருகேசன், நகர்மன்ற தலைவர் சாந்தி, துணைத் தலைவர் தங்க .கலிய மூர்த்தி, மத்திய ஒன்றிய திமுக செயலாளர் தெய்வ இளையராஜன் பொதுக்குழு உறுப்பினர் இரா.பாலு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவ லர் மா.ரேணுகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலர் (பொ) பி.சுமதி, மாவட்ட க்கல்வி அலுவலர் ஆ.பாலசுப்ரமணி யன்,பள்ளிக்கல்வித்துறை துணை ஆய்வாளர் பழனிச்சாமி, பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






; ?>)
; ?>)
; ?>)
