• Mon. Nov 3rd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

வளர்ச்சி திட்ட பணிகளில் மோசடி

ByJeisriRam

Oct 9, 2024

உப்பார்பட்டி ஊராட்சியில் வளர்ச்சி திட்டப் பணி வேலைகள் செய்யாமலே 7 வளர்ச்சி திட்ட பணிகளில் 20,20000 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக உப்பார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் குற்றம் சாட்டிள்ளார்.

தேனி மாவட்டம், உப்பார்பட்டி ஊராட்சியில் கடந்த 2021 – 2023 ஆண்டுகளில் மட்டுமே 7 வளர்ச்சி திட்ட பணிகள் செய்யாமலே தேனி ஊராட்சி ஒன்றிய பொது நிதியில்
(Theni Panchayat Union General Fund-ல்) Rs. 20,20,000/- (Rupees Twenty Lakhs and Twenty Thousand) மோசடி செய்துள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்டவர்களுக்கு புகார் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உப்பார்பட்டி ஊராட்சியில் சிப்காட் சாலை, பெண்கள் சுகாதார வளாகத்திற்கு மின் வசதி தட்டோடு டைல்ஸ் மற்றும் தண்ணீர் வசதி செய்தல், வடிகால் வசதி செய்தல் உள்ளிட்ட 7 வேலைகளுக்கு உத்தரவு வழங்கி, செய்யாத வேலைகளை செய்ததாக கணக்கு காட்டி Rs. 20,20,000/- (Rupees Twenty Lakhs and Twenty Thousand) பண மோசடி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக உப்பார் பட்டி, தப்புக் குண்டு, பூமலைக் குண்டு, உள்ளிட்ட 3 ஊர்களுக்கு மையமாக வைத்து சிப்காட் தொழில்பேட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சிப்காட் தொழிற்பேட்டைக்கு செல்லக்கூடிய சாலை 40 லட்சம் ரூபாய்க்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலைக்கு மட்டும் 4 முறை வளர்ச்சி திட்ட பணிகள் செய்யாமலே மோசடியாக பணம் கையாள செய்யப்பட்டுள்ளது. இதேபோல் உப்பாரப்பட்டி ஊராட்சியில் பெண்கள் சுகாதார வளாகத்திற்கு மின்சார வசதி தட்டோடு. டைல்ஸ் மற்றும் தண்ணீர் வசதி செய்யாமல் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. வடிகால் வசதி செய்யாமலும் பணம் கையாடல் செய்யப்பட்டது.

உப்பார்பட்டி ஊராட்சி மன்றத்தில் செய்யாத வேலைக்கு பணம் கையாடல் செய்யப்பட்டது போல், தேனி மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் செய்யாமலே பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.

எனவே ஊரக வளர்ச்சி துறை செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர், தேனி மாவட்டஆட்சித் தலைவர் உள்ளிட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உப்பார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் புகார் தெரிவித்துள்ளார்.