தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள காதி கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையம் சார்பில், மண் பொருட்கள் சார்ந்த தொழில் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மத்திய சிறுகுரு தொழில்கள் அமைச்சகம் சார்பில் மண்பாண்டங்கள் தொழில்கள் முனைவோருக்கான முகாமில் மண்பாண்டங்கள் சார்ந்த தொழில் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மேலும் 15 நாட்கள் மண்பாண்டங்கள் செய்யும் பயிற்சி, மத்திய அரசு திட்டத்தின் கீழ் கடன் பெறுதல், உபகரணங்கள் வழங்குதல், உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.
காதி கதர் கிராம ஆணையம் நிர்வாக அதிகாரி மணிவண்ணன், பிரிவு இயக்குனர்
செந்தில்குமார், ராமசாமி, துணை பிரிவு இயக்குனர் சரவணன், துணைபிரிவு இயக்குனர் செந்தில்குமார்RSETI முதல்வர், ரவிக்குமார், துணை இயக்குனர், குமரன் நிர்வாக அதிகாரி மணவாளன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.