• Sun. Sep 21st, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நடிகர் பாபுராஜ் மீது மோசடி புகார்!

மலையாள திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் பாபுராஜ். தமிழில் ஸ்கெட்ச், ஜனா மற்றும் வீரமே வாகை சூடும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் வில்லனாக நடித்த இவர் மீது தற்போது கேரள மாநிலம் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் அருண்குமார் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தொடர்ந்து புகார் மனுவில், மூணாறில் உள்ள ரிசார்ட் ஒன்றை 2020 ஆம் ஆண்டு 40 லட்சம் அட்வான்ஸ் என்றும் 3 லட்சம் வாடகை என்று, ஒப்பந்தம் போட்டு குத்தகைக்கு எடுத்ததாகவும், அதன் பின் கொரோனா ஊடரங்கு காரணமாக பல நாட்கள் ரிசார்ட் மூடப்பட்டதாகவும் கூறியுள்ளார். ஊரடங்கு முடிந்து மீண்டும் திறக்க சென்ற போதும் வருவாய்த் துறையினரால் அந்த இடம் 2018-ஆம் ஆண்டே கையகப்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அதை மறைத்து தனக்கு வாடகைக்குக் கொடுத்து பாபுராஜ் மோசடி செய்து விட்டதாகவும், தான் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்ட போது தர மறுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தற்போது பாபுராஜ் மீது அடிமாலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.