• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு குடிமக்கள் விழிகள் குழுவின் நான்காவது மாநில மாநாடு

தமிழ்நாடு குடிமக்கள் விழி கண் குழு நான்காவது மாநில மாநாடு சென்னை வெஸ்டின் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் தொல் திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் சட்ட அமலாக்கம் குறித்த 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக மதிப்பெண் அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில் பெரும்பாலான மாவட்டங்களில் மாவட்ட விழிகண் குழு கூட்டங்கள், ஆண்டிற்கு நான்கு முறை நடத்தப்படுவதில்லை. கோட்ட அளவிலான விழிகண் குழு பெரும்பாலான கோட்டங்களில் அமைக்கப்படாமலும் ,செயல்படாமலும் உள்ளது.வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நீதி, நிவாரணம் ,மறுவாழ்வு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சாட்சிகளுக்கும் ஆதரவு அளித்தல் தொடர்பான அரசு நிர்வாகத்தில் உள்ள அமைப்பு ரீதியிலான பலவீனம் மற்றும் குறைவான செயல் திறன் ஆகிய காரணங்களால் சட்டப்படி அரசு வேலைகள், ஓய்வூதியங்கள் ,வீடுகள், விவசாய நிலங்கள் அல்லது கல்வி ஆதரவு முதலியவை அவர்களை சார்ந்தவர்களுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படாமல் மறுக்கப்படாமல் விரைந்து செயல்பட அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 15 அன்று பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினரை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் தேசியக் கொடியேற்றுவதை உறுதி செய்த தமிழ்நாடு அரசிற்கும் இந்த சட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்ற, முதல் ஆண்டிலேயே மாநில விழிகண் குழு கூட்டங்கள் இரண்டு முறை நடத்தியதற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாநாட்டின் முக்கிய அம்சமாக தலித் மற்றும் ஆதிவாசி உரிமைப் பிரகடனம் வெளியிடப்பட்டது.
கூட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் சாமுவேல்ராஜ் ஆதித்தமிழர் கட்சித் தலைவர் கு. ஜக்கையின்,திருமதி தீப்தி சுகுமார், தலித் விடுதலை இயக்கத்தின் மாநில இளைஞரணி செயலாளர் கிச்சா, மாநில மகளிர் அணி செயலாளர் தலித் நதியா, அரியலூர் மாவட்ட விழி கண் குழு பொறுப்பாளர் ஜான் திருநாவுக்கரசு,தேனி மாவட்ட பொறுப்பாளர் பி. முருகேசன், கரூர் மாவட்ட பொறுப்பாளர் நாகலட்சுமி, தென்காசி மாவட்ட பொறுப்பாளர் வசந்தகுமார், கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பாளர் சிதம்பரம் மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளர் பத்மினி, திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர் ராஜா உட்பட பல்வேறு மாவட்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மாநில நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.