• Thu. May 28th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள் ஏலம்..

Byகாயத்ரி

Sep 12, 2022

பிரதமர் நரேந்திர மோடி அவர் எங்கு சென்றாலும் அரசியல் பிரபலங்கள், முக்கிய புள்ளிகள் உள்ளிட்ட பலர் பரிசுகளை வழங்குவது உண்டு. அந்த வகையில், பிரதமர் மோடி பெற்ற 1,200-க்கு மேற்பட்ட பரிசு பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன.

தொடர்ந்து 3 தடவை ஆன்லைன் மூலம் ஏலம் நடந்துள்ள நிலையில், வரும் 17-ஆம் தேதி 4-வது முறையாக ஆன்லைன் மூலமாக பிரதமர் மோடியின் பரிசு பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளது. வரும் 17-ஆம் தேதி தொடங்கும் ஏலம், அக்டோபர் 2-ஆம் தேதி முடிவடைகிறது. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணம், கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ஏலத்தில், அரசியல் பிரபலங்கள் அளித்த பரிசுகள் உட்பட, டி-சர்ட், குத்துச்சண்டை கையுறைகள், ஈட்டி, பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் கையெழுத்திட்ட டென்னிஸ் மட்டை உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள், ஓவியங்கள், சிற்பங்கள், கைவினை பொருட்கள், பாரம்பரிய அங்கவஸ்திரம், சால்வை, தலைப்பாகை, வாள் ஆகியவையும் ஏலத்தில் விடப்பட உள்ளது. பரிசு பொருட்களின் ஆரம்ப விலை ரூ.100 முதல் ரூ.10 லட்சம்வரை ஏலத்தில் விடப்பட உள்ளது.