புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வல்லத்திராகோட்டை
கிராமத்தில் உள்ள வல்லநாடு கண்மாய் புனரமைக்கும் பணி நிகழ்ச்சியை நீர்வளத்துறை சார்பாக இன்று பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் சிவ.வீ .மெய்யநாதன் கலந்து கொண்டு 350 லட்சம் மதிப்பீட்டில் வல்லநாடு கண்மாய் புணரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டினார்.

வல்லநாடு கண்மாய் வழியாக பூவரசகுடி, வல்லத்திரா கோட்டை, வாண்டாகோட்டை, மணியம்பலம், கல்லாங்காடு, கத்தக்குறிச்சி, மற்றும் 40 ஊர்க்கிராமப் பகுதியில் உள்ள விவசாயம் செய்வதற்காக விவசாயிகளுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதி அமைப்பதற்காக இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். திமுக திருவரங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கே பி கே டி தங்கமணி வள்ளியம்மை, ஒன்றியச் செயலாளர் அரு.வடிவேலு. உதவி செயற்பொறியாளர் ராஜரத்தினம் செயற்பொறியாளர் சண்முகவேல் உதவி பொறியாளர் முகமது அப்துல்லா மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.










