• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த தினம்; சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே மலரஞ்சலி

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த தினத்தில் அவரது நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்றவர் ஜவகர்லால் நேரு. அவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, டெல்லியில் உள்ள சாந்தி வனம் என்ற அவரது நினைவிடத்திற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட காங்கிரசார் இன்று சென்றனர். அவர்கள் நினைவிடத்தில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். இதுபற்றி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், நவீன இந்தியாவை உருவாக்கியவர் பண்டிட் நேரு. அவரது வளர்ச்சிகர எண்ணங்கள், சவாலான சூழலிலும் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற்றம் அடைய வழிவகுத்தது. ஜனநாயகத்தின் சாம்பியன். உண்மையான தேசப்பற்றாளருக்கு எனது பணிவான அஞ்சலி என அவர் தெரிவித்து உள்ளார்.