• Wed. Jun 26th, 2024

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை நான் “இந்தியாவின் தாயாக” பார்க்கிறேன்-மத்திய இணைஅமைச்சர் சுரேஷ்கோபி புகழாரம்

கேரள மாநிலத்திற்கு தெய்வத்தின் பூமி என்ற புகழ் பெயர்,அன்று தொட்டு இன்றுவரை தொடர்கிறது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை, நான்"இந்தியாவின் தாயாக"பார்க்கிறேன் என்று மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி புகழ்ந்து பேசியுள்ளார்.

கேரளாவில் புகழ் பெற்ற பல் சமய இறைவழிபாட்டு ஆலயங்கள் உள்ளன. மன்னர் காலம் தொட்டு இன்றுவரை பருவ மங்கையர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் சுவாமி ஐயப்பன் கோயில் உள்ளது.

எத்தனையோ புகழ் இந்துக் கோவில்கள் இருந்தாலும்,இந்துத்துவாவை ஆதரிக்கும் பாஜக கேரளாவில் பஞ்சாயத்து, ஊராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி,நேமம் சட்டமன்றம் ஆகிய உறுப்பினர் பகுதிகளை எல்லாம் வெற்றியை பெற்ற பாஜகவிற்கு நாடாளுமன்ற வெற்றி நீண்ட கால கனவாக அந்த கட்சியின் அகில இந்திய தலைமைக்கு இருந்தது நடந்து முடிந்த 18_வது மக்களவை தேர்தலில். மலையாள மொழி திரைப்பட புகழ் பெற்ற நடிகர் சுரேஷ் கோபி பாஜகவின் மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். வாக்காளர்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் உறுப்பினராக வேண்டும் என்ற அவரின் கனவை திருச்சூர் மக்களவையில் போட்டி இட்டு வெற்றி பெற்ற கையோடு மத்திய அரசின் சுற்றுலாத்துறை இணை அமைச்சராக பதவியை பெற்றுள்ளார்

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திருச்சூர் மக்களவைத் தொகுதியின் முக்கோண போட்டியில்,

பாஜக சார்பில் சுரேஷ் கோபி, காங்கிரஸ் சார்பில் கேரளாவின் மூத்த காங்கிரஸ் தலைவர் மறைந்த கே. கருணாகரனின் மகன் முரளிதரன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் என களத்தில் நின்றனர்.

சுரேஷ் கோபிக்கு இந்து மக்களின் ஆதரவோடு, கிறிஸ்தவ மக்களும் பெரு வாரியாக வாக்களித்து சுரேஷ் கோபியின் வெற்றிக்கு உதவினார்கள் என்ற செய்தியை உண்மையாக்கியது அவரது மனைவி கிறிஸ்தவ மக்களின் வாக்குகளை சேகரித்தது.

மத்திய அரசின் சுற்றுலாத்துறை இணை அமைச்சரின் மனைவி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்ற தகவல் தொகுதி மக்களின் மத்தியில் உலா வருகிறது.

மத்திய அமைச்சர் பதவி ஏற்றபின். கேரள மாநிலத்தின் அரசியலில் மூத்த தலைவர்கள் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்திய அமைச்சர் சுரேஷ் கோபி.அந்த பகுதியில் உள்ள புகழ்பெற்ற லூர்து மாதா கிறித்தவ தேவாலயத்திற்கும் சென்று வழிபட்டவர்.(தேவாலயத்தில் திருப்பலியில் போது சுரேஷ் கோபி வாய்ப்பு கிடைக்கும் நாட்களில் கொயரில் படுவதும் உண்டு)

செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தது.

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே. கருணாகரன்,, முன்னாள் முதல்வர் ஈ.கே.நாயினார் இருவரும் எனது அரசியல் குரு போன்றவர்கள். இவர்களை போன்றே இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை, நான் “இந்தியாவின் தாயாக”பார்க்கிறேன் என தெரிவித்தார்.

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபியின் அணுகு முறை அவரது அரசியல் நாகரித்தை வெளிப்படுத்துவதை காண முடிகிறது என்பது மக்களின் பொது கருத்தாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *