• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அதிபர் ட்ரம்பின் முதல் மனைவி காலமானார்…

Byகாயத்ரி

Jul 15, 2022

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முதல் மனைவி இவானா. அவருக்கு வயது 73. இவர் நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்தார்.

டிரம்பின் முதல் மனைவியான இவானா 1992 ஆம் ஆண்டு ட்ரம்பிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார். இந்நிலையில், நியூயார்க் காவல்துறையின் அவசர உதவி எண்ணிற்கு வந்த அழைப்பின் பேரில் போலீசார் அவர். வீட்டிற்க்கு சென்றுபார்த்தனர். அப்போது, அங்கு இவானா சுயநினைவின்றி கிடந்ததாகவும், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக நியூயார்க் நகர போலீசார் தெரிவித்துள்ளனார். இவானா மரணத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே அவரது இறப்புக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.