• Fri. Mar 27th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

விபத்தில் காயம் அடைந்தவர்கக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி

ByS. SRIDHAR

May 5, 2025

கெண்டையன்பட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்ற வாகனத்திற்கு முன்னால் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்தில் காயம் அடைந்தவர்களை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி சிகிச்சை செய்து ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், மலையூர் பகுதியில் இன்று நடைபெற இருந்த பூத் கமிட்டி கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் உடன் அவரது ஆதரவாளர்கள் சென்று கொண்டிருந்த பொழுது, கெண்டையன்பட்டி பகுதியில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளான காரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நெடுஞ்செழியன் அவர்களது கார் ஓட்டுநர் மற்றும் குளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராசு ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்த இருவரையும் பின்னால் வந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக மீட்டு முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு, ஆம்புலன்சில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.