• Fri. Apr 26th, 2024

பிரதமர் மோடிக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ புகழாரம்

ByKalamegam Viswanathan

May 27, 2023

தமிழர்களின் கலாச்சாரத்தை பாராம்பரியத்தை மோடி நிலை நாட்டுகிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புகழாரம்.
மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 11-வது வார்டு அண்ணாநகர் மந்தையில் நாடகம் மேடை கட்டிடவும், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில்ஊர்மெச்சிகுளம் பள்ளிக்கூடத்தில் புதிய வகுப்பறை காட்டவும், ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் வார்டு 12 வடக்கு விரிவாக பகுதியில் சிறு பாலம் கட்டும் பணி, ரூ.21.70 மதிப்பீட்டில் பரவை ஊர்மெச்சிக்குளம், சத்தியமூர்த்தி நகர் ஆகிய பகுதியில் 7 இடங்களில் சின்டெக்ஸ்சுடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைத்தல் ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது.
இந்த பூமிபூஜையினை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ., தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் கலா மீனா ராஜா, பேரூர் செயலாளர் ராஜா, பேரூராட்சி துணைத் தலைவர் ஆதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சௌந்தர பாண்டியன்வரவேற்றார்.இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
பரவை பேரூராட்சியில் ஏறத்தாழ 57 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டிடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டு உள்ளது. அரசுபள்ளியில் சேரும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கையை அதிகரிக்க ஆண்டுகள் தோறும் ரவை பேரூராட்சியில் சேர்மன் ஏற்பாட்டில் பள்ளியில் முதலில் சேரும் மாணவ மாணவிகளுக்கு தங்க நாணயம் உற்சாகப்படுத் துவதற்கு வழங்கி வருகிறார். 2020- 21 -ல் 60 லட்சம் ரூபாய் இந்தப் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது
இப்பகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள் நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.எடப்பாடியார் ஆட்சியில் இப்பகுதியில் உள்ள கண்மாய் குடி மராமத்து பணி. செய்ததால் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக தண்ணீர் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது.பரவை பேரூராட்சிக்கு மட்டும் ரூ.10 கோடிக்கு மேல் நலத்திட்ட பணிகள், வளர்ச்சி பணிகளை செய்துள்ளோம். தற்போது முதல்வர் வெளிநாடு சென்றிருப்பது தொழில் முதலீட்டுக்காக அல்ல, இன்ப சுற்றுலாவுக்காக தான். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் விதமாக விதமாக டிரஸ் போட்டு வெளிநாட்டிற்கு சென்று ஒரு படத்தில நடத்திருப்பார். அதேபோல விதவிதமாக டிரஸ் போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்து வருகிறார் முதல்வர். வெளிநாட்டு பயணத்தில் அந்த அளவுக்கு வெற்றி கிடைக்குமா? என தெரியவில்லை.வருமானவரித்துறை ரெய்டுக்கு போன வாகனங்களை அடித்து நொறுக்குவது, அதிகாரிகளை மிரட்டி இருப்பதற்கு காரணம் திமுக என்றாலே வன்முறைக்கு பெயர் போன கட்சி என்பதுதான் வருமானவரித்துறை ரெயிடை முன்கூட்டியே செய்திருந்தால் விஷசாராயத்தால் இவ்வளவு உயிர் போயிருக்காது. இந்த மாதிரி சாவுகளை தடுத்திருக்கலாம். இந்த ரைடு முன்கூட்டியே நடந்திருக்கணும்.
இன்றும் வருமானவரித்துறை ரெய்டு நடந்திருப்பதாக சொல்லுகிறார்கள். முதல்வர் கிழக்கத்திய நாடுகளுக்கு சென்றிருப்பது முதலீடுகளை ஈர்ப்பதற்காகல்ல. முதலீடு செய்வதற்காக தான் சென்றிருப் பார். அதனால கூட ரெய்டு நடந்திருக்கலாம். இது குறித்து எங்க பொதுச்செயலாளரரே கூறி இருக்கிறார்,இதற்கு முன்னாடி வெளிநாடு பயணம் சென்று என்ன தொழில் கொண்டு வந்தார். ஆக இது விளம்பர அரசு தான்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒரு சொட்டு மது கூட இருக்காதுன்னு சொன்னாங்க. இப்போ சாராய ஆறா ஓடுது. கள்ள சாராயம் பெருக்கெடுத்து ஓடுது. பல உயிர்கள் பலியாகுது. திமுக அரசின் அவலங்களுக்கு இந்த கள்ளச் சாராயம் ஒரு எடுத்துக் காட்டு. கள்ளச்சாராய த்தால் செத்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்வது தான் இந்த திமுக ஆட்சியின் அவலம்.
ரெய்டு போன அதிகாரியை தடுத்து நிறுத்துவது, மிரட்டுவது உயிருக்கு பயமுறுத்தல் செய்வது கண்டிக்க தக்கது. கஞ்சாவை தமிழ்நாட்டில் தடுக்க முடியல. காவல்துறை நினைத்தால் தடுக்க முடியும். நமது காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகரான காவல்துறை. நமது டிஜிபி சைலேந்திரபாபு வை சுதந்திரமாக செயல்பட விட்டால் ஒரு துளி அளவு கஞ்சா கள்ளச்சாராயம் தமிழ்நாட்டில் நடமாட முடியாது என்றார். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை திமுக புறக்கணிப்பு செய்வது கண்டிக்கத்தக்கது.
திமுக – காரங்க முன்னுக்கு முரணாக பேசுகிறார்கள். சோழ மன்னர்கள் பயன்படுத்திய செங்கோலை அன்று ஆதீன பெருமக்கள் நேருவிடம் ஒப்படைத்தனர். அதே செங்கோலை புதிதாக அமைகிற நாடாளுமன்ற கட்டிடத்தில் பாரத பிரதமர் மோடிஜி வழிவகை செய்திருக்கிறார். ஒவ்வொரு தமிழ் குடிமகனும் மோடியை பாராட்டணும்.தலைமுறை, தலைமுறையாக நம்முடைய செங்கோல் நம்மை பறைசாற்றுகிற அந்த செங்கோல் அங்க அமைய இருப்பது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை. பாரதப் பிரதமரை தனிப்பட்ட முறையில் தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்தை, தமிழ் வரலாற்றை எடுத்து இயங்கும் மோடிஜியை பாராட்டுகிறேன். தமிழ் குடிமகன் ஒவ்வொருவரும் மோடிஜியை பாராட்டணும்.


தமிழன், தமிழன் என்று சொல்லக் கூடிய திமுக தலைவர் குடும்பம் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்பது என்னுடைய ஆசை தனிப்பட்ட ஆசை, தமிழனுடைய ஆசை.முதன்முதலில் பழங்குடியினத்தை சேர்ந்த சங்குமாவை ஜெயலலிதா தான் முதன் முதலில் தேர்தலில் நிறுத்தியதை ஆதரித்தார்கள். அதே போன்று முதன் முதலாக சிறுபான்மை இனத்தை சேர்ந்த அப்துல் கலாம் அவர்களை ஜெயலலிதா முன்மொழிந்து ஜனாதிபதி ஆக்கினார்கள். அதையும் அன்று கலைஞர் யார் அந்த கலாம் என்று சிறுமைப்படுத்தினார்.அதேபோல் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தும் போது இழிவாக பேசினார்கள். அவர்களை வெற்றி பெற செய்யவில்லை. இது திமுகவின் நாடகம்தான் என தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். எப்போதும் திமுகவினர் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருந்ததில்லை. சுயநலம், தன்நலம் இப்படித்தான் பார்ப்பார்கள்.ஒரு தமிழனா பெருமைக்கு பெருமை சேர்க்கிற வகையில் அந்த செங்கோல் வழங்கும் விழாவில் இன்று மணம் மாறி திமுகவினர் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்றார். இன்று திருமா. நல்ல பேசியிருக்கிறார் தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கு கொண்டு வரணும். இல்லையென்றால் போராடுவேன் என கூறியிருக் கிறார். திருமாவளவன் எந்த பக்கம் இருந்தாலும் இந்த செங்கோல் வழங்கும் விழாவை கொச்சைப் படுத்தக் கூடாது. இதில் மத சாயம் பூச கூடாது என கேட்டுக்கொள் கிறேன் என்றார்.ஜி20. மாநாடு இங்கே தான் மோடி தலைமையில் நடக்கிறது. ஒரு பிரதமர் மோடி.காலில் விழுகிறார். ஒரு பிரதமர் பாஸ் என்று அழைக்கிறார்.அப்படி உலக தலைவர்கள் பாராட்டும் பிரதமர் மோடிஜி. நம் தமிழர்களுடைய கலாச்சாரத்தை பாரம்பரியத்தை நிலை நாட்டுகிறார். கள்ளச் சாராயம், மதுவிலக்கு கண்டித்து நாளை மறுநாள் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. அதிமுக கடல் மாதிரி. போராட்டம் ஆர்ப்பாட்டம் என பொங்கி எழுந்தால் மக்கள் மத்தியில் எழுச்சி உண்டாகும். மற்றகட்சிகள் குளம், குட்டை மாதிரி என்றார்.ஐபிஎல் போட்டியில்
சிஎஸ்கே தான் ஜெயிக்கணும். கோப்பையை வெல்லனும்.
நாம, தல- தல னு சொல்கிறோம் உண்மையான தலை தோனி தான் என்றார். இந்த நிகழ்ச்சியில்கவுன்சிலர்கள் ரமேஷ், செபஸ்தியம்மாள்பிரகாசம், கீதா செந்தில், வின்சி தர்மேந்திரா, திருஞானகரசி திருப்பதி, நாகேஷ்வரிதிலகர், ஜெயராஜ், நாகமலை, முத்துபாண்டி, செந்தில், ராஜ்குமார், ஆரோக்கியசாமி, அசோகன், ராஜு, பிரவின்,செல்வம், சீனிவாசன், பாண்டியராஜன், டி.கே.கருப்பையா மற்றும் பேரூராட்சிபணியாளர்கள் ராமு, ஈஸ்வரன், துரைப்பாண்டி உள்பட பலர்கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *