கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதியம்மன் கோவில்களில் முன்னாள் அமைச்சர்
ராஜேந்திரபாலாஜி சுவாமி தரிசனம்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சரும், அதிமுக விருதுநகர் மாவட்ட கழக செயலாளருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி சுவாமி தரிசனம்.
முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மாவட்ட அதிமுக கழகச் செயலாளருமான கே. டி. ராஜேந்திரபாலாஜி கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்தார். அதரை தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
மேலும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு கழக நிர்வாகிகளுடன் சென்று அம்மனை தரிசனம் மேற்கொண்டார். இதில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழகச் செயலாளர் தாமரை தினேஷ், மண்டைக்காடு மாணிக்கராஜ், குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரூஸ், ஆறுமுகராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.