குமரி மார்த்தாண்டம் பாலம் வரமா? சாபமா? குண்டும் குழியுமாக.
கன்னியாகுமரி_திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை (NH 47) பாதையில் உள்ள பெரிய நகரம் “மார்த்தாண்டம்” இந்த பாலம் கட்டுவதற்கு முன் காலை 9 மணிமுதல் இரவு 8 மணி வரை வாகனங்கள் ஊர்ந்து சென்ற காட்சி.
மார்த்தாண்டம் பாலம் குமரி மக்களவை உறுப்பினராகவும், மத்திய இணை அமைச்சராகவும் இருந்தவர் பொன். இராதாகிருஷ்ணன் பாலத்திற்கான இடம் ஆர்ஜிதம் செய்வதில் அன்று எழுந்த பிரச்சனை இன்றும் உயிரோட்டமாக இருக்கிறது.
மார்த்தாண்டம் பாலத்தின் அருகில் இருக்கும் ஒரு மருத்துவமனையை அகற்றாது, பாலம் அமைக்க அமைச்சர் முயல்கிறார் என்ற குற்றச்சாட்டும், பாலம் பணி முடிந்தது, மார்த்தாண்டம் பாலம் பணிகள் முடிந்து பாலம் குறித்த 1000_விமர்சனம் இருந்தும். பொதுமக்களுக்கு ஏற்பட்ட உடனடி “கை” மேல் பலன். பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை, மேம்பாலம் வழியாக போக்குவரத்து நடந்ததில் மகிழ்ச்சி அடைந்தனர் அப்பகுதி மக்கள்.
மார்த்தாண்டம் பாலம் திறப்பு. சாலையில் நீண்ட வரிசையில் வாகன வரிசை இல்லை. பாதசாரிகள் இன்னல் இல்லாமல் மார்த்தாண்டம் சாலையில் பயணித்தனர்.
சாலையில் நடந்து செல்லும் மக்கள் தலைமீதுள்ள பாலம் அசைந்துக்கொண்டு இருந்தாலும், நெரிசலில் சிக்கி கால விரையம் இல்லாது செய்த தெய்வத்திற்கு மக்கள் மானசீகமாக நன்றி சொல்லி கடந்து போனார்கள்.
அண்மை காலமாக மேம் பாலத்தில் சிதைவு போக்குவரத்து தடை, மீண்டும் பழைய மார்த்தாண்டம் அவதாரம் எடுத்துவிட்டது.
போக்குவரத்து மாற்றம், சாலையில் மீண்டும் வாகன நெரிசல் என்ற பழைய காலம் திரும்பி விட்டதும், மேம்பாலத்தில் அடுத்த சிதைவு.
கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் மார்த்தாண்டம் பாலம் சிதவடைந்ததும், அந்த இடத்திற்கு உடனே வந்தது மட்டும் அல்ல. தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை அந்த இடத்திற்கே வரவழைத்து சொன்ன குற்றச்சாட்டு, மக்களின் துன்பத்தை உடன் போக்க எடுத்த நடவடிக்கை மக்களால் பாராட்டப்பட்டது.
விளவங்கோடு சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினருமான தாரகை கத்பட் கட்சியினர் அமர்ந்து கொண்டு நடத்திய அஞ்சலி கூட்டத்தை. பாஜகவை சேர்ந்த பொன்னார், அவரது கட்சியினர் நின்று கொண்டு சொன்ன பதில்கள். ஒரு வித்தியாசமான காட்சியை, குமரி மக்கள் மட்டுமே அல்ல, தமிழகமே பார்த்தது.!!
மார்த்தாண்டம் பாலத்தின் கீழ் உள்ள சாலை கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சாலைகள். குண்டும், குழியுமாக இருப்பதில் பாதிக்கப்பட்ட பேருந்து ஓட்டுனர் படும் அவலம்.? வார்த்தைகளால் எப்படி சொல்லுவது.!? வாசகர்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.