• Fri. Dec 26th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கடும் விமர்சனம்.,

ByP.Thangapandi

Dec 26, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.,

இந்த கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயக்குமார்.,

திமுக 10 கட்சி கூட்டணி, அதிமுக தேசிய கட்சியோடு கூட்டணி, அவங்க கடந்த நாடாளுமன்றத்தில் வாங்கிய வாக்கு, அதிமுக வாங்கிய வாக்கு என பார்க்கும் போது 41% அதிமுக கூட்டணியில் வைத்திருக்கிறோம்.,

2026 தேர்தலில் ஆளும் கட்சியின் எதிர்ப்பு அலையினால் 42%, 62 சதவீதமாகலாம் என்பது தான் மக்களின் தீர்ப்பு.,

கள நிலவரம் அதுதான், பல தொகுதிகளில் திமுக டெப்பாசிட்-யை காப்பாத்துவார்களா என்றே தெரியவில்லை, ஏதோ மமதையில் இருக்கிறார்கள்.,

மூட்டை மூட்டையாக வைத்திருக்கிறார்கள், பணமூட்டை அல்ல, பொய் மூட்டைகளை அதை கட்டவிழ்த்து விடுவோம், மக்களை ஏமாற்றி விடுவோம் என்ற பருப்பு வேகாது.,

இன்று மக்கள் தீர்ப்பை மட்டும் மதிக்காமல் நடப்பது இல்லை, அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், நீதிமன்ற தீர்ப்பை மதிக்க மாட்டார்கள்.,

திமுகவின் ஒரே நோக்கம் இந்த சந்தர்ப்பத்திலேயே உதயநிதியை முதல்வர் அறியணையில் அமர வைத்து வாரிசு அரசியலுக்கு மகுடம் சூட்ட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள்.,

அதற்காக எத்தனை ஆயிரம் கோடி வேண்டுமென்றாலும் செலவழிப்பார்கள்., அதற்கு என்ன செய்கிறார்கள் என்றால் நேர்வழியில் அதிமுகவை மோத முடியாது.,

அதனால் அதிமுக பலவீனம் ஆகிவிட்டது, அவர் போய்விட்டார், இவர் போய்விட்டார் எனவும் இவர் போக போகிறார், அவர் போக போகிறார் அதிமுக 3 ஆக இருக்கிறது, 5 ஆக இருக்கிறது என கூறி வருகிறார்கள்.,

இங்கிருந்து போனவர் ( செங்கோட்டையன் ) பொறுத்திருந்து பாருங்கள் யார் யார் வருகிறார்கள் என்றார், சொல்லி 3 மாதங்கள் ஆகிவிட்டது, அவரது நிழல் கூட அவருடன் போகவில்லை., அவர் போறார், இவர் போகிறார், உனக்கு ஏன் வயிற்று எரிச்சல்., அதிமுகவில் நல்லா அமைச்சராக இருந்துட்ட, தலைமை நிலைய செயலாளராக இருந்துட்ட போ போய் யாரை வேண்டுமானாலும் வாழ்க என சொல், ஆனால் அதிமுக வை பலவீனப்படுத்த எண்ணினால் அதிமுகவின் கடைசி தொண்டன் இருக்கும் வரை இந்த இயக்கத்தை எவனாலும் தொட்டு பார்க்க கூட முடியாது.,

நீங்க இருந்த போது அதிமுக நல்லா இருந்தது, நீங்க இல்லை என்றதும் அதிமுக கேடு கெட்டு போய்டுமா., எந்த வகையில் நியாயம்., போய்டீங்கள போய்டுங்க திரும்ப ஏன் சுரண்டிட்டே இருக்கீங்க, நீ வரீயா, நீ வரீயா ஏன் இந்த வயிற்று எரிச்சல்.,

ஏனென்றால் அதிமுக ஆட்சி அமைக்க போகிறது, அதிமுக தொண்டர்னா உங்களுக்கு தொக்கா, ஒன்பது முறை எம்எல்ஏ வா இருந்தீங்கல எப்படி ஆனீங்க., இந்த கொடி பிடிக்கும் தொண்டன் இந்த கடைசி தொண்டனின் உழைப்பால், புரட்சி தலைவரின், அம்மாவின், இரட்டை இலையின் செல்வாக்காள் 9 முறை எம்எல்ஏவாக ஆனீங்க, இனிமேல் என்ன ஆவீங்க என ஆண்டவனுக்கு தான் தெரியும்.,

போதா இருந்தா போய்டுங்க, தொண்டர்களின் இயக்கத்தை தொண்டர்கள் பார்த்துக் கொள்வார்கள், பலவீனப்படுத்த வேண்டாம்.,

டிவியை திறந்தாலே நெஞ்சுவலி வருகிறது, நினைத்து பார்க்க முடியாத அளவு என்ன என்னமோ பேசுகிறார், இது தொண்டர்கள் கட்சி, திமுகவா பயப்பட, பதற்றப்பட.,

அதிமுக இந்தியாவிலேயே ஏழைகளுக்கான ஒரு இயக்கம் இருக்கிறது என்றால் எம்.ஜீ.ஆர்., அம்மா, எடப்பாடியார் கட்சி, அதிமுக.,

அதிமுகவை பலவீன படுத்த எத்தனை தீய சக்திகள் புறப்பட்டாலும், எம்.ஜீ.ஆர், அம்மா வின் தெய்வ சக்தி இருக்கும் வரை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவின் வெற்றி வரலாறை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.,

தை பிறந்தாள் வழி பிறக்கும், தேர்தல் பணிகளை செய்ய வேண்டும்., வரைவு வாக்காளர் பட்டியலில் நமது பெயரும் இருக்கிறதா என பார்த்துக் கொள்ள வேண்டும்.,

உசிலம்பட்டி தொகுதியில் இரட்டை இலையை தவிர எந்த சின்னமும் மலராது, இது தான் வரலாறு, நாளை உசிலம்பட்டி வரும் கனிமொழி அக்கா விதவை எண்ணிக்கையை குறைக்க போவதாக சொன்னார்கள் அதற்கு ஏதாவது நடவடிக்கை எடுங்க.,

நாடாளுமன்றத்தில் பேசி மக்களுக்கு நல்லது செய்ய முடியுமா என பாருங்க உரிமையை நிலை நாட்டுங்க.,

எதிர்க்கிறேன், எதிர்க்கிறேன் என சொல்லி இருப்பதையும் இழந்து இந்தியாவிலேயே தமிழ்நாடு கடன் சுமையில் முதன்மை மாநிலமாக இருக்கிறது உங்களது நிர்வாக சீர்கேட்டால்., அதையெல்லாம் சீர் திருத்த வேண்டும்., என பேசினார்.,