• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை அதிமுக மாநாட்டிற்கு செல்லும் நிர்வாகிகளை.., கொடியசைத்து தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்..!

Byவிஷா

Aug 19, 2023

அ.தி.மு.க. சார்பில் மதுரையில் எழுச்சிமிகு மாநாடு நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டை வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக மட்டுமின்றி அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் மாநாடாக நடத்தி முடிக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களிடம் பிரித்து கொடுக்கப்பட்டு இரவு-பகலாக நடந்து வருகிறது. மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள் பங்குபெற வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் மதுரையில் நாளை நடைபெற உள்ள மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ,ருந்தும் தொண்டர்கள், நிர்வாகிகள் பஸ், கார் உள்ளிட்டவற்றில் மதுரைக்கு பயணித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், மதுரையில் நாளை நடைபெற உள்ள மாநாட்டிற்கு சென்னை ராயபுரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பேருந்துகள் மூலம் இன்று காலை மதுரைக்கு பயணத்தை தொடங்கினர். இந்த பயணத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.