• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் – அதிமுகவினர் மலர் தூவி மரியாதை..,

ByG.Suresh

Dec 5, 2023

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 7ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கும் வகையில் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் எம்எல்ஏ தலைமையில், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்‌ ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் நகர செயலாளர் என்.எம் ராஜா, வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன் உட்பட அதிமுக ஒன்றிய, மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.