• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

முன்னாள் முதல்வர் எடப்பாடி பிறந்த தினம்

ByN.Ravi

May 13, 2024

மதுரை அருகே, குமாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா அன்னதானம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார்.
முன்னாள் தமிழக முதல்வரும் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடி பழனிச்சாமியின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மேற்கு தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட குமாரம் பகுதியில் அன்னதானம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. அன்னதானத்தை, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் தமிழ்நாடு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு, மேற்கு தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சோழவந்தான் எம்.வி.கருப்பையா, மாணிக்கம், உசிலம்பட்டி மகேந்திரன் மற்றும் அம்மா பேரவை மாநில நிர்வாகிகள் ராஜேஷ் கண்ணா, வெற்றிவேல், துரை தன்ராஜ், ஒன்றியச் செயலாளர்கள் அலங்காநல்லூர் ரவிச்சந்திரன், வாடிப்பட்டி வடக்கு காளிதாஸ் செல்லம்பட்டி எம்.வி.பி.ராஜா மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் மேற்கு தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிளை கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் உட்பட கலர் கலந்து கொண்டனர்.