• Sun. Mar 16th, 2025

அதிமுக முன்னாள் இளைஞர் அணி மாவட்ட செயலாளரும், ஒபிஎஸ் ஆதரவாளருமான வின்சென்ட் ராஜா-க்கு கொலை மிரட்டல்

Byகுமார்

Feb 18, 2024

பரமக்குடி அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அதிமுக முன்னாள் இளைஞர் அணி மாவட்ட செயலாளரும், ஒபிஎஸ் ஆதரவாளருமான வின்சென்ட் ராஜா தென்மண்டல ஐஜியிடம் புகார் அளித்தார்.
பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் வின்சென்ட் ராஜா கூறியதாவது: பரமக்குடி சந்தையில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகள், அங்கு வரும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூல் செய்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் நகராட்சி சார்பில் ஏலம் விடப்படுகிறது.
இந்த ஏலத்தல் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி குறைந்த தொகையான 15 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்து வருகிறார். நகராட்சி நிர்வாகமும் அவருக்கு சாதகமாகவே செயல்படுகிறது. வேறு யாரும் ஏலம் எடுக்க முன்வந்தால் கொலை மிரட்டல் அவர்களை ஏலம் எடுக்க விடாமல் தடுக்கின்றனர்.
புரமக்குடி நகராட்சி சார்பில் இந்த ஆண்டிற்கான ஏல அறிவிப்பு வெளியாகியது. நுhன் ஏலம் எடுப்பதற்காக நகராட்சி நிர்வாகத்தில் ஏல முன் வைப்பு தொகை டிடியில் செலுத்தினேன். ஏலத்தில் கலந்து கொண்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.
இதுபற்றி மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த நீதிபதி ஏலத்தை முறையாக நடத்த வேண்டும். ஏலம் நடப்பதை முழுவதும் வீடியோ பதிவு செய்யவும், போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டார்.
ஏலம் நடப்பதற்கு முன் என்னை கொலை செய்வதற்கு முனியசாமி கூலிப்படையை ஏவிவிட்டுள்ளார். அவர்கள் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ ஒலிப்பதிவும் உள்ளது. அவர்களிடமிருந்து ஐகோர்ட் உத்தரவுப்படி எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.