• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திமுகவுக்கு தாவிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு பிடிவாரண்ட் !!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ எஸ்.காமராஜ், மீது மோசடி வழக்கில் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ எஸ். காமராஜ். இவர் தற்போது திமுகவில் இணைந்துவிட்டார். கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் சீட் கொடுக்கவில்லை. இதனால் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவாகவும், கரூர் மாவட்ட ஜெ பேரவை செயலாளருமான எஸ்.காமராஜ் திமுகவில் இணைந்தார்.

இவர் கரூர் ஆண்டான்கோயில் அம்பாள் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரிடம் கடந்த 20.01.20 ல் எம்.எல்.ஏ காமராஜ், அவசர செலவிற்காக ரூ 10 லட்சம் பணம் கடனாக பெற்றுள்ளனர். சரியாக வட்டி செலுத்தாமலும், கடன்தொகையை திருப்பி செலுத்தாத காரணத்தால் முன்னாள் எம்எல்ஏ காமராஜ் மீது ராமசந்திரன் செக் மோசடி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த கரூர் விரைவு நீதிமன்ற நீதிபதி சரவணபாபு, முன்னாள் எம்எல்ஏ காமராஜருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.