
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி திமுகவில் இணைய உள்ளார். இதே போல மேலும் பல நிர்வாகிகளும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டத்திற்கு 3 நாள் பயணமாக முதல்வர் மு..க.ஸ்டாலின் சென்றுள்ளார். பொள்ளாச்சியில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி திமுகவில் இணைகிறார். இவருடன் வேறு சில முன்னாள் எம்.எல்.ஏக்குளும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.கொங்கு மண்டலத்தில் திமுகவை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் திமுக வில் இணைவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
