

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்ய தேசிய செய்ற்குழு கூட்டம் வரும் 28ம் தேதி கூடுகிறுது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி தொடர்ந்து மறுத்து வருகிறார். ராகுல் காந்தி மறுத்த போதிலும் அவர்தான் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்று பெரும்பாலான நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். நேரு குடும்பத்தை சாராத வேறு நிர்வாகிகளை தலைவர் பதவியில் நியமிக்க முறையான ஆலோசனை எதுவும் நடக்கவில்லை. இந்த குழப்ப நிலைக்கு முடிவு கட்ட சோனியா காந்தியே தலைவர் பதவி யில் நீடிக்க வேண்டும் என்றும் சில தலைவர்கள் யோசனை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட தேசிய செயற்குழு கூட்டம் வருகிற 28-ந்தேதி சோனியா காந்தி தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அட்டவணை பற்றி முடிவு எடுக்கப்படும்.
