• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கழக அம்மா பேரவை சார்பில், 35 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அனுப்பி வைத்தார்..!

கழக அம்மா பேரவையின் சார்பில், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, சமையல் பொருட்கள், பெட்ஷீட், துண்டு, கைலி, சேலை, குடிநீர், ரொட்டி, பிஸ்கட் உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்களை சென்னை அதிமுக தலைமை கழகத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்ததாவது..,
மிக்ஜாம் புயல் தமிழகத்தில் கரையை கடக்க வில்லை. நெல்லூர் அருகே தான் கடந்ததுஃ ஆனால் புயலின் தாக்கத்தால் மக்கள் தண்ணீரில் தத்தளித்து கண்ணீர் வடித்து வருகிறார்கள்.  இந்த புயலில் மீட்பு பணியை சரியாக மேற்கொள்ளவில்லை ஒரு மழைக்கே 3 லட்சம் குடியிருப்பில் வெள்ளம் சூழ்ந்துள்ளது வரலாறு காண வகையில் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

ஐந்து நாட்களாக மின்சாரம் வழங்கவில்லை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிறு கடைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அத்யாவசிய கடைக்கள் அடைக்கப்பட்டது. காய்கறிகள், பால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் வருமுன், வெள்ளம் நடக்கும்பொழுது, வெள்ளம் வந்த பின்பு என மூன்று நிலைகளை கடந்த காலங்களில் நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம் ஆனால் இன்றைக்கு மூன்று நிலைகளில் திமுக தோல்வி விட்டது.
அடையாறு, கூவம், பள்ளிக்கரணை உள்ளிட்ட ஐந்து நீர் வழித்தடங்கள் தான் மழை நீரை கடத்த முடியும் ஆனால் அதற்குரிய இணைப்புகளை முறையாக செய்யவில்லை. முதலமைச்சர், தலைமைசெயலாளர், அமைச்சர்கள் சரியான எச்சரிக்கை மக்களுக்கு செய்யாமல் கவனக்குறைவாக இருந்தார்கள்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது, இது போன்ற புயல் காலங்களில் நிமிடத்திற்கு நிமிடம் தகவல் வரும் அதை நாங்கள் மக்களிடத்தில் சொல்லுவோம் ஆனால் இந்த அரசு எத்தனை முறை கூறி உள்ளது. ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் மழை பெய்தது அப்போது நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது டிசம்பர் 3 4 மழை பாதிப்பிலிருந்து மக்களை காபற்றியிருக்கமுடியும்.
4,000 கோடி செலவு செய்யப்பட்டது என்று கூறினார்கள் அதை கடலில் கரைத்த பெருங்காயம் போல் கரைத்து விட்டார்களா? மக்களை காப்பதில் அரசு கோட்டை விட்டது. மக்களைப் பற்றி கவலைப்படாமல் சேலம் இளைஞர் அணி மாநாட்டில் உதயநிதிக்கு மகுடம் சூட்ட அனைத்து அமைச்சர்களும் சேலத்தில் இருந்தார்கள். புல்லட் ஓட்டி நகர் வலம் வருகிறார்கள். அதே போல் கார் ரேஸ{க்கு நிதி ஒதுக்கீடு செய்தார்கள். வடகிழக்கு பருவமழையில் யாராவது கார் ரேஸ் வைப்பார்களா? அதேபோல் மாநாடு நடத்துவார்களா?
எடப்பாடியார் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு களத்தில் வந்த பின்பு தான் எல்லா கட்சித் தலைவர்களும் வந்தனர். மீட்பு பணிகளுக்கு வாகனங்களுக்கு டீசல் கூட போட முடியாத அவல நிலை உள்ளது. கார்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று மோதி உள்ளது. மழைநீர் வடிகால் பணியை 90சதவீதம் முடித்து விட்டோம் என்று கூறினார்கள் ஆனால் 10சதவீதம் கூட திமுக அரசு முடிக்கவில்லை. பால் விலை 200 ரூபாய் விற்கப்படுகிறது. படகில் ஒரு குடும்பத்தை மீட்க 5000 ரூபாய் என வசூல் செய்யப்பட்டுள்ளது. தனியார்களை இப்படி அனுமதிக்கலாமா? அரசு கையாளாகாத்தனதால் இது இப்படி நடக்கிறது இது போன்ற அம்மா ஆட்சியில் நடந்தது உண்டா?
மழை நீரை கடல் உள்வாங்காதால் பாதிப்பு ஏற்பட்டது என்று பத்தாம் பசிலியாக திமுக சொல்கிறது. மழை பெய்யும் போது புயல் கரையைக் கடக்கும் போது கடலில் நீர் உள்வாங்காது. ஆனால் இதை சொல்லி நியாயப்படுத்துகிறார்கள். சென்னையில் மட்டும் ஒரு லட்சம் தெருக்கள் உள்ளது. எடப்பாடியார் ஆட்சியில் உலக வங்கி மற்றும் தமிழ்நாடு அரசு நிதியுடன் 2,850 கோடி மதிப்பில் சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் செயல்படுத்தப்பட்டன. ஏறத்தாழ 3,600 மழைநீர் தேங்கும் இடங்கள் சென்னையில் இருந்தது எடப்பாடியார் எடுத்த நடவடிக்கையால் 40 இடங்களாக குறைக்கப்பட்டது.

சென்னையை சுற்றி 3000 ஏரிகள் உள்ளது இது போன்ற காலங்களில் அதிகமாக மழை பொழியும் பொழுது உவரி நீர் வெளியேறி சென்னைக்குள் நீர் புகுந்துவிடும் கடந்த எடப்பாடியார் ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இது போன்ற ஏரிகளை சீரமைக்கப்பட்டதால் அந்த நீர்கள் எல்லாம் ஊருக்குள் வராமல் தடுக்கப்பட்டன. தற்போது விடியா தி.மு.க அரசு அந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட்டதால் சென்னை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. 
2011 ஆம் ஆண்டு தானே புயல், 2012 ஆம் ஆண்டு நீலம் புயல், 2013 ஆம் ஆண்டு மடி புயல், 2016 ஆம் ஆண்டு வர்தா புயல், 2017 ஆம் ஆண்டு ஒக்கி புயல், 2018 ஆம் ஆண்டு கஜா புயல், 2020ஆம் ஆண்டு நிவர் புயல் ஆகியவற்றை சிறப்பாக கையாளப்பட்டது குறிப்பாக கஜா புயலில் எந்த ஒரு உயிரிழப்பு இல்லாத வகையில்  எடப்பாடியார் சிறப்பாக கையாண்டார்
கடந்த காலத்தில்  4,133 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டன. 662 பல் துறை மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டன. அதேபோல் பேரிடர் காலங்களில் 43,409 முதல் நிலை மீட்பாளர்கள் ஆயத்த நிலையில் இருப்பார்கள் இவர்களில் 14,232 மகளிர் என்பது குறிப்பிடதக்கது. குறிப்பாக மாவட்ட ஆட்சிதலைவரோடு வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒன்றிணைத்துஇருக்கும். மேலும் கால்நடையை பாதுகாக்க 8,771 முதல் நிலை மீட்பாளர்கள் அமைக்கப்பட்டன
அதேபோல் மரத்தை அகற்ற 9,000 பேர்கள் இருந்தனர் ஒரு லட்சம் சிறுபாலங்களை சீரமைக்கப்பட்டன சமுதாய கிச்சன்கள் அமைக்கப்பட்டன தற்போது மூன்று லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது ஆனால் முதலமைச்சர் ஒரு சட்டியில் புளியோதரை வைத்து மக்களுக்கு கொடுக்கிறார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு எடப்பாடியார் ஆணைக்கிணங்க சென்னை தலைமை கழகத்தின் மூலம் நிவாரணம் வழங்கப்படுகிறது ஏற்கனவே கோவையில் இருந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முப்பது லட்சம் மதிப்பில் பொருட்களை அனுப்பி வைத்தார் தற்போது கழக அம்மா பேரவையின் சார்பில், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் அரிசி, சமையல் பொருட்கள், பெட்ஷீட், சேலை துண்டு ,குடிநீர், பிஸ்கட் ரொட்டி, கோதுமை மாவு என 35 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை அனுப்பி உள்ளோம்.
அமைச்சர் நேரு தற்போது நடைபெற்ற மழை வடிகால் பணியை நியாயப்படுத்தி பேசுகிறார் ஏற்கனவே அவர் 90சதவீதம் முடித்து முடித்ததாக பேட்டி அளித்துள்ளார் என்ன தேதி என்று கூட நான் வெளியிடுகிறேன். பாதிப்பிற்கு முன்பு ஒரு பேச்சு, பாதிக்கப்பட்ட பின்பு இன்னொரு பேச்சு என்று பேசுகிறார் இதன் மூலம் தோல்வியை ஒப்புக்கொள்கிறாரா?
திமுகவிடம் மனித நேயம் இல்லை, திமுகவிடம் மனித நேயம் செத்து விட்டது. அதனால் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மனிதநேயத்துடன் கருணை உள்ளத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் இது போன்ற நிவாரண பொருட்களை நாங்கள் வழங்கி உள்ளோம்.2015 ஆம் ஆண்டு பெய்த மழையை செயற்கை என்று கூறுகிறார்கள் புயல் மழை என்றால் இயற்கையாகத் தான் பெய்யும். செம்பரம்பாக்கம் ஏரியில் எவ்வளவு தண்ணீர் இருந்தது, தண்ணீர் எவ்வளவு வரும் என்று தெரியாமல் அப்போது இருந்த திமுக பழி சுமத்தியது.ஆனால் அன்றைக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஐஏஎஸ் குழுக்களை அமைத்து தன்னார்வ தொண்டுகள் மூலம் நிவாரண பொருட்களை அங்கிருந்து மக்களுக்கு வழங்கினோம். இன்றைக்கு ஜேசிபியில் ஒரு அமைச்சர் அமர்ந்து கொண்டு மக்களுக்கு வாழைப்பழம், பிரட் ஆகியவற்றை எப்படி வழங்கினார் என்று உங்களுக்கு தெரியும் மக்கள் உயிர் வேறு உங்கள் உயிர் வேறா? மக்கள் என்ன அகதிகளா?
இன்றைக்கு முத்த ஐஏஎஸ் அதிகாரியிடம் ஆலோசனை கேட்பதில்லை. கடந்த காலத்தில் சிறப்பாக பணியாற்ற ககன்சிங் பேடி தற்போது எங்கே போனார்? அவருக்கு தான் சென்னையில் வடிகால் பணி பற்றி தெரியும். கடந்த சுனாமியின் போது சிறப்பாக அதிகாரிகள் பணியாற்றிய அதிகாரிகள் இப்போது இருக்கிறார்கள் அவர்கள் எங்கே போனார்கள. இன்றைக்கு திமுக அரசு முடங்கி போய் உள்ளது என கூறினார்.