• Tue. Apr 7th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

சட்டப்பேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கோரிக்கை..,

Byமுகமதி

Feb 21, 2026

சட்டப்பேரவை கூட்டத்தொடரானது கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வருகிறது நேற்றைய கேள்வி நேரத்தின்போது விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்ருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கோரிக்கை ஒன்றை வைத்தார்.

அந்தக் கோரிக்கையானது விராலிமலை சட்டமன்றத் தொகுதி மண்டையூர் ஸ்ரீ பெரிய அய்யனார் திருக்கோயிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்று இந்த திருக்கோயில் ஆனது பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோவில் என்றும் மிகவும் பழமைவாய்ந்த இந்த கோயிலுக்கு ராஜகோபுரம் கட்ட அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார், இதனைத் தொடர்ந்து விராலிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு முழு நேர செயல் அலுவலர் நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.