• Fri. Feb 20th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

கள்ளக்காதல் விவகாரம் : பெண் கொலை

ByMuthukumar B

Feb 15, 2025

பொள்ளாச்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம் பாறைமேடு பகுதியில் மணிமேகலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவன் என்பவர் கடந்த சில மாதங்களாக பழக்கமானதால் இருவரும் நெருங்கி பழகி வந்து உள்ளனர் மணிமேகலைக்கு இரண்டாவது திருமணம், ஜீவனுக்கு முதல் திருமணம் இருந்தும் இருவரும் கள்ளக்காதலால் தகாத உறவில் இருந்து உள்ளனர். நேற்று இரவு இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக ஜீவன் மணிமேகலையை கையால் தாக்கியுள்ளார் இதில் மயக்கம் அடைந்த மணிமேகலை உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அருகில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில், ஆனைமலை காவல் நிலைய போலீசார் மணிமேகலை உடலை கைப்பற்றி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆனைமலை காவல் நிலைய துணை கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி உத்தரவின் பேரில் ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் தாமோதரன் தலைமையில் கள்ளக்காதலன் ஜீவனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த சம்பவத்தில் மணிமேகலை மற்றும் ஜீவனுக்கு குழந்தை பிறந்துள்ளது இவர்கள் இருவர் பிரச்சினையால் ஒரு வயது குழந்தை தற்போது அனாதையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.