• Fri. Apr 26th, 2024

காட்டுப்பன்றிக்கு சிகிச்சை அளித்த வனத்துறையினர்!

மஞ்சூரில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சாலை ஓரங்களில் கொட்டப்படும் உணவு கழிவுகள், இறைச்சிக் கழிவுகளை தின்பதற்காக வனப்பகுதிகளில் இருந்து காட்டுப்பன்றிகள் கூட்டமாக வருகின்றன. மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் நடமாடி வருகின்றன!

இதற்கிடையே அங்கு காட்டுப்பன்றி ஒன்று குப்பை தொட்டியில் இருந்த உணவு பொருட்களை தின்றது. அப்போது தொட்டியில் இருந்த பிளாஸ்டிக் வளையம் காட்டுப்பன்றியின் காலில் சிக்கியது. இதனால் நடக்க முடியாமல் சிரமம் அடைந்தது.  

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து காட்டுப்பன்றியை ஒரு மணி நேரம் போராடி பிடித்தனர். பின்னர் காலில் சிக்கிய பிளாஸ்டிக் வளையத்தை வெட்டி அகற்றினர். தொடர்ந்து காட்டுப்பன்றி வனப்பகுதியில் விடப்பட்டது.

வனப்பகுதிகளை ஒட்டி உள்ள இடங்களில் உணவுக்கழிவுகளை கொட்டுவதால் வனவிலங்குகள் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் நடமாடி வருகிறது. இதனால் மனித-விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *