விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி அய்யனார் கோவில் அருகே அமைந்துள்ள சிவானந்த பரமஹம்சரின் ஜென்ம தினமாகிய திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதான விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சிறப்பு வழிபாடு அன்னதானம் நடைபெற்றது.

இராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க்கப்பட்டன. இந்நிலையில் பொதுமக்கள் அய்யனார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றனர். அப்போது பெய்த மழையால் ஆற்றில் சற்று அதிகமா தண்ணீர் வந்தது. இதனால் பொதுமக்கள் ஆற்றைக்க் கடக்க சிரமப்பட்டனர்.உடனடியாக வனத்துறையினர் கோவிலில் இருந்து 20 நபரை ஆற்று நீரில் இருந்து பத்திரமாக கடக்க உதவி செய்தனர். பின்னர் வனத்துறையினர் மற்ற பொது மக்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை.








