• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மீண்டும் இயங்குகிறது ஃபோர்ட் நிறுவனம்

உலகளவில் மிகப்பெரிய கார் நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ட் நிறுவனத்திற்கு, இந்தியாவில் குஜராத்திலும், சென்னை அருகே உள்ள மறைமலை நகரிலும் தொழிற்சாலைகள் உள்ளன.
இங்கு ‘ECOSPORTS’, எண்டவர்’. ‘ஃபிகோ’ மாடல் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்

எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லாததால் ஃபோர்டு நிறுவனம்.

5 ஆயிரத்து 161 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்த நிலையில், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதால், கார் உற்பத்தியை நிறுத்திவிட்டு இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக, கடந்த 9ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதை நம்பியுள்ள 4 ஆயிரம் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறைமுகத் தொழிலாளர்களுக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் ஊழியர்களின் பணி பாதுகாப்பு குறித்த தொழிற்சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளை ஏற்க ஃபோர்டு நிறுவனம் மறுத்துவிட்டது. அதனால் அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாது.

இந்தநிலையில், ஃபோர்டு நிறுவனம் இதுவரை பெற்ற ஆர்டர்களில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை ஏற்றுமதி செய்ய வேண்டி இருப்பதால் இன்னும் பல மாதங்களுக்கு மறைமலைநகர் தொழிற்சாலையில் உற்பத்தி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் அங்கு பணியாற்றும் உழியர்களுக்கு சற்றே ஆறுதல் அளித்தாலும், தமிழ்நாடு அரசும் அரசியல் கட்சிகளும் தங்களது வாழ்வாதாரத்தை காப்பதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்கள் ஃபோர்ட் தொழிலாளர்கள்.