• Tue. Apr 16th, 2024

தென் தமிழகத்திலேயே முதல் முறையாக..,
சேப்பியன் 3 டிரான்ஸ்கத்திடர் இருதய வால்வு டெலிவரி சிஸ்டம் அறிமுகம்..!

Byகுமார்

Feb 7, 2022

தென் தமிழகத்திலேயே முதல் முறையாக, சேப்பியன் 3 டிரான்ஸ்கத்திடர் இருதய வால்வு டெலிவரி சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனை தலைவரும் நிர்வாக இயக்குனருமான டாக்டர் எம்.ஜே.அருண்குமார் இதுகுறித்து கூறியதாவது..,
கடந்த ஒரு வருட காலமாக சுவாசப் பிரச்சினையினால் அவதிப்பட்ட 72 வயது பெண்மணி எங்களது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டார். ஏற்கனவே ஹைபர்டென்ஷன், தைராய்டு சுரப்பியில் கட்டி ஆகிய கோளாறுகள் அவருக்கு இருந்தன. தைராய்டு சுரப்பியில் இருந்த கட்டியை அகற்ற ஏற்கனவே அறுவை சிகிச்சையை அவருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் எக்கோ கார்டியோகிராம் மற்றும் ஆஞ்சியோ கிராம் எடுத்துப் பார்த்ததில் அவருக்கு இருதய கோளாறும் இருந்தது தெரியவந்தது. தைராய்டு சுரப்பியில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை தேவையாக இருந்த அவருக்கு அயோடின் ஸ்டெனாசிஸ் அறுவை சிகிச்சையும் செய்து செய்வது அவசியமானதாக இருந்தது. உடல் பருமன் ,தைராய்டு சுரப்பிக் கட்டி ஆகியவற்றுடன் நோயாளி வயதானவராக வேறு இருந்ததால் வழக்கமாக மயக்க மருந்து கொடுத்து 3 முதல் 4 மணி நேரம் செய்யப்படும் ஓபன் ஹார்ட் சர்ஜரி தவிர்க்கப்பட்டது. அவருக்கு கேத்லேப் முறையில் ஆஞ்சியோகிராம் தொழில்நுட்பத்தில் லோக்கல் அனஸ்தீசியா மூலம் நோயாளி சுயநினைவுடன் இருக்கும் நிலையில் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே சாவித்துவாரம் ஆஞ்சியோகிராபி முறையில் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. கடந்த மூன்று நாட்களுக்கு முன் எட்வர்ட்ஸ் சாபியென் 3 டிரான்ஸ்கத்திடர் ஆர்டிக் இம்பிளாண்டேஸன் வாழ்வு இம்பிளாண்டேஷன் எனப்படும் சிகிச்சையை அந்த பெண்மணிக்கு செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்த அன்றே நலமடைந்து அந்த பெண்மணி தனது உணவை வழக்கமாக சாப்பிட்டதோடு தனது அறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த வுயுஏஐ சிகிச்சைமுறை இருதய அறிவியல் இயக்குனர் மற்றும் மூத்த இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ மாதவன், மூத்த இருதய சிகிச்சை நிபுணர் மற்றும் எலக்ட்ரோ பிசியாலஜிஸ்ட் டாக்டர் ஏ.பி.கோபாலமுருகன், இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சேகர் மற்றும் ஆஷிக் நிமானுச்சலா, கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ் ராம்குமார், இயக்குனர் டாக்டர் அருண்குமார், டாக்டர். ரமா சங்கரி நரம்பியல் மயக்கவியல் நிபுணர்.
டாக்டர் நவீன் கார்த்திக் மயக்கவியல் நிபுணர் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினராலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய கேத்லேப் பணியாளர்களின் உதவியால் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.
மதுரை அண்ணா ஜோசப் மருத்துவமனையில் எழுதிய அறிவியல் இயக்குனர் மற்றும் மொத்த இருதய சிகிச்சை நிபுணரும் ஆகிய டாக்டர் மாதவன் கூறியதாவது..,
இருதயம் என்பது சிக்கலான வால்வுகளை உடைய போன்றதாகும் வயோதிகத்தால் அயார்டிக் வால்வில் ஏற்படும் கோளாறுகள் அயோர்டிக் ஸ்டெனோஸிஸ் ஏற்பட வழிவகுக்கும். வாழ்வின் இந்த பகுதியில் இருந்துதான் உடலில் பல்வேறு பகுதிகளுக்கு இந்த வால்வு குறுகினால் பொதுவாக ஓபன் ஹார்ட் சர்ஜரி பரிந்துரைக்கப்படுவது வழக்கம். அதே சமயம் எல்லா வயதினரும் மயக்க மருந்து கொடுத்து ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்ய முடியாது. சமீபத்தில் முனதொடை பகுதியில் ஓபன் சர்ஜரி இல்லாமல் சாவித்துவாரம் சிகிச்சையில் வால்வு மாற்றம் வெற்றிகரமாக செய்யப்பட்டது. இந்த முறையில் இருதய வால்வு ஏமாற்றப்பட்ட நோயாளி இரண்டு நாளில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பலாம். இருதயத்தில் ஏற்படும் அடைப்பு மற்றும் வால்வுகளில் ஏற்படும் கோளாறுகளுக்கு இந்த TAVI அதிநவீன சிகிச்சை முறையாகும். எங்களது நோயாளிகளுக்கு வயோதிகத்துடன் இணை நோயாளிகள் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் தைராய்டு கட்டி ஆகியவை இருந்தால் ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை தவிர்க்கப்பட்டு எட்வர்ட் சேபியென் 3 டெலிவரி சிஸ்டத்தில் சிகிச்சை முறை வெற்றிகரமாக செய்து முடிக்க பட்டதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஹான்னா ஜோசப் மருத்துவமனையில் அதிநவீன கேத்லேப் தொழில் நுட்பத்துடன் கூடிய 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது .மேலும் ஈ95 உடன் கூடிய எக்கோ கார்டியோ மற்றும் வென்டிலேட்டர், மானிட்டர் 20 படுக்கைகளுடன் கூடிய அதிநவீன இருதய சிகிச்சை வசதிகள் உள்ளன. கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இருதவியல் மையத்தில் அனைத்து சிக்கலான ஆஞ்சியோ பிளாஸ்டிக், வாஸ்குலார் இமேஜிங் மற்றும் எக்கோ போன்ற கார்டியோ சிகிச்சைகள் வழக்கமான இங்கே செய்யப்படுகின்றன. புரோனிக் அட்மிஷன் ஆஞ்சியோபிளாஸ்டி எலக்ட்ரிகல் மருத்துவம் ,ரேடியோ பிரின்ஸிப்லஸ் ஆகியவை வழக்கமான பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்ட யுஐஊனு பொருத்துதல் ஆகிய சிகிச்சைகள் வளர்ந்த நாடுகள் செய்யப்படுவது போல சிறப்பாக செய்யப்படுகின்றன. காரோனரி ஆட்டரி பைபாஸ் சர்ஜரி, பீடடிங் ஹார்ட் சர்ஜரி, இருதய வால்வு மாற்றம் மற்றும் சீரமைப்பு இதயத்தில் ரத்த உறைவை நீக்குதல் மற்றும் தொராசிக் அறுவை சிகிச்சைகள் எங்களது நிறுவனத்தில் வழக்கமான சிறப்பாக செய்யப்படுகின்றன என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *