• Sat. Apr 20th, 2024

மதுரை அப்போலோ மருத்துவமனையில் நுண்துளை அறுவை சிகிச்சையில் சாதனை!

Byகுமார்

Feb 15, 2022

மதுரையை சேர்ந்த 6ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் ஆன்லைன் வகுப்பில் படித்து கொண்டிருந்தபோது மதிய உணவு இடைவேளையில் திடீரென மயங்கி கீழே விழுந்தான். பின்னர் சுயநினைவு திரும்பிய அவனுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டது. அவரது பெற்றோர் உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு சிறுவனுக்கு மூளையில் ஏதேனும் இரத்தக் கட்டிகள் இருக்கிறதா என்று கண்டறிய கதிரியக்க இமேஜிங் செய்யப்பட்டது. இரத்த கட்டிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் அவர் உயர் சிகிச்சைக்காக அப்போலோ சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு மூளையின் இரத்த நாளங்களில் உள்ள கட்டிகளை துல்லியமாக கண்டறிய உயர்தர கதிரியக்க இமேஜிங் மேற்கொள்ளப்பட்டது. இது சிறுவனின் மூளையின் உள்ளே உள்ள ஒரு பெரிய இரத்த நாளத்தில் உள்ள ஒரு சிதைந்த மூளை அனீரிசத்தை வெளிப்படுத்தியது. அவரது உடல்நிலை குறித்து பெற்றோர்கள் விளக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு திட்டமிடப்பட்டது. அவர் மூன்று மணி நேரத்திற்குள் அறுவை சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டார். மேலும் அவருக்கு நுண்துளை கிளிப்பிங் (Microsurgical Keyhole Clipping) எனும் நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுவன் கோவிட் பாசிட்டிவ் என்பதால், அவர் கோவிட் பராமரிப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். மூளை அனீரிசம் மற்றும் கோவிட் ஆகியவற்றிற்கு சேர்த்து சிகிச்சை பெற்றார். 5 நாட்களில் படிப்படியாக குணமடைந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்த சந்திப்பின் போது, டாக்டர்.D.ஷியாம் டாக்டர்.S.N.கார்த்திக் டாக்டர் .B.நிஷா டாக்டர் கெவின் ஜோசப், டாக்டர் G..பத்மபிரகாஷ் டாக்டர் முருகன் டாக்டர் ஜெயராமன் மற்றும் மருத்துவமனைகள் பிரிவின் மூத்த துணைத் தலைவர் டாக்டர் ரோகினி ஸ்ரீதர் மற்றும் மருத்துவ சேவைகள் இணை இயக்குனர் டாக்டர் பிரவீன் ராஜன், மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் .கே.மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *