• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. ரூ.50 லட்சம் விபத்து காப்பீடு..!

Byவிஷா

Dec 14, 2023

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி, வங்கியில் சம்பள கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடு தொகை 50 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பள கணக்கு வைத்துள்ள அனைவரும் இந்த பலனை அனுபவிக்க முடியும்.
சம்பள கணக்கு இல்லாத நபர்கள் விபத்து காப்பீடு திட்ட தொகையை கணக்கிற்கு ஆயிரம் ரூபாய் ஆண்டுதோறும் செலுத்தினால் காப்பீடு துவையாக 20 லட்சம் ரூபாய் வரை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது போன்ற அதிக அளவிலான பலன்களை தரக்கூடிய விபத்து காப்பீடு திட்டத்தில் எஸ் பி ஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் அனைவரும் இணைந்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.