சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது. இப்போட்டியானது இன்று (ஜூலை 28) முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ள நிலையில் சென்னையில் 7 அடுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.