• Tue. Dec 10th, 2024

செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு 3500க்கும் மேற்பட்ட உணவு வகைகள்…

Byகாயத்ரி

Jul 28, 2022

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர் சென்னை அருகில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பியாட் செஸ் போட்டியை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.

செஸ் ஒலிபியாட் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பல முக்கிய பிரபலங்ளுடன் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாட்டை தமிழக அரசு கடந்த சில மாதங்களாக தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. 187 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். இந்த போட்டியில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்தநிலையில் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு புதுவகையான உணவு வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் இந்த போட்டியில் பல வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ள நிலையில் அவர்களுக்கு அந்த நாட்டு உணவுகளையே வழங்குவதற்காக அனைத்து வகையான உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக 77 மெனு கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், 3500க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம்பெற்றுவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்றும் பிரதான உணவு வகைகளாக 700 வகைகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு 3 வேளையும் தேவையான உணவுகள் மற்றும் டி,காபி போன்றவை வழங்கவும், பல்வேறு மாநிலங்களில் இருந்து சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். வீரர்களுக்கு ஒரு நாள் கொடுக்கப்படும் உணவு வகைகள் மீண்டும் மாறு நாள் திரும்ப வராமல் புதிய வகை மெனுக்களும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு நம் மண்ணின் பெருமையையும், உணவு உபசரணையும் தெரிவிக்க ஒரு நல்ல முயற்சி.