

அதிமுகவில் இரட்டை தலைமை போர் ஆரம்பித்து ஓபிஎஸ் இபிஎஸ் இரண்டாகிவிட்டனர். ஒற்றுமை ஒற்றுமை என்று கூவி தற்போது வேற்றுமை ஆகிவிட்டது.
அதன் பின் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் இரட்டை தலைமை போர் இன்னும் ஓயவில்லை.இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் வகித்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதிவியும் ஆர்.பி.உதயகுமாரிடம் சென்றுவிட்டது. இப்போது அடுத்த கட்ட நகர்வில் இருக்கிறது அதிமுக. இதை தொடர்ந்து கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தனது 50 வது பிறந்தநாளையொட்டி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
