• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

பல்வேறு உணவு கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை..,

ByM.I.MOHAMMED FAROOK

Jun 10, 2026

காரைக்காலில் உள்ள பல்வேறு உணவு கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை. சுவைக்காக உணவில் கலக்கப்படும் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்களை பினாயில் ஊற்றி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அழித்தனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு உணவு கடைகளில் இன்று புதுச்சேரி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது வாடிக்கையாளர்களுக்கு தயார் செய்யப்படும் உணவுகள் தரமான முறையில் தயார் செய்யப்படுகிறதா, உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்கள் தரம் குறித்தும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள உணவுகளை ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து உணவு தயாரிக்க சுவைக்காக தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்கள் பயன்படுத்தியதால் அதனை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் வாடிக்கையாளர்களுக்கு தயாரிக்கப்படும் உணவுகள் தரமான முறையில் தயாரிக்க வேண்டும் என்று உணவு கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.