திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சாப்பிட சென்ற போது, அனுமதி மறுக்கப்பட்டதால் பிரச்சனை ஏற்பட்டது. இதை படம் எடுத்த பத்திரிக்கையாளர் கேமரா பறிக்கப்பட்டதால், பத்திரிகையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு திண்டுக்கல் வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக உற்சாக வரவேற்பளித்தனர். இந்நிலையில் திண்டுக்கல்லில் இன்று காலை கட்சியின் 7 முக்கிய நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தி விட்டு, வர்த்தக சங்கம், தொழில் வர்த்தக சங்கம், விவசாய சங்கம், தோல் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் 4 முக்கிய சங்கம் நிர்வாகிகளை மட்டும் பேச அழைத்தார்.
பின்பு அனைவரிடமும் எடப்பாடி பழனிச்சாமி மனுக்களை வாங்கினார். பின்பு வந்திருக்கும் அனைத்து சங்க நிர்வாகிகளும் சாப்பிட்டு செல்லுமாறு அழைப்பு கொடுத்தார். இதையடுத்து சாப்பிடச் சென்ற சங்க நிர்வாகி உடன் கட்சி நிர்வாகிகளும் சென்றனர். கட்சி நிர்வாகிகளுக்கு சாப்பாடு மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் மோதும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதை படம் பிடித்த பத்திரிக்கையாளர்களுடைய கேமராக்களை அங்கு பாதுகாப்புக்கு இருந்த பவுன்ச்சர்கள் பறித்து உடைக்க சென்றனர். இதனால் பத்திரிகையாளர்களுக்கும், பவுன்சர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பத்திரிகையாளர்கள் ரோடு மறியல் செய்தனர். பின்பு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அவரது மகன் ராஜ்மோகன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சமாதானப்படுத்தி இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறியதையடுத்து, அனைத்து பத்திரிகையாளர்களும் கலைந்து சென்றனர். இதனால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.













; ?>)
; ?>)
; ?>)