• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

வள்ளலார் அமுதசுரபி அறக்கட்டளை சார்பாக அன்னதானம்…,

Byசோலைஆதி

Apr 2, 2026

சோழவந்தான் மாரியம்மன் சன்னதி வஉசி சிலை அருகே வள்ளலார் அமுதசுரபி அறக்கட்டளை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கு தலைவர் நீலமேகம் தலைமை தாங்கினார். கௌரவத்துணைத் தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். நிர்வாகி காசிராஜன் வரவேற்றார்.

கௌரவ தலைவர் முன்னாள் சேர்மன் எம்.கே.முருகேசன் அன்னதானம் வழங்கினார். சன்மார்க்க சங்கம் முள்ளிப்பள்ளம் கருப்பசாமி சொற்பொழிவாற்றினார். துணைத் தலைவர் சிவபாலன், துணைச்செயலாளர் செந்தில்குமார், முத்தையா கௌரவ விரிவுரையாளர் டாக்டர் முத்தையா உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வ உ சி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வள்ளலார் திருவுருவப்படத்திற்கு சோழவந்தான் ஆர்எம்எஸ் புரமோட்டர்ஸ் டெவலப்மெண்ட் இன்ஜினியர் ரவிச்சந்திரன் சண்முகப்பிரியா அகல் விளக்கு ஏற்றி வைத்தனர்.

தமிழ்நாடு வஉசி பேரவை திண்டுக்கல் மாவட்ட தலைவர் ஜெயமாணிக்கம் வளர்மதி ஆகியோர் வள்ளலார் திருவுருவப்படத்திற்கு மலர் தூவினர். செயலாளர் ராஜாராம் நன்றி கூறினார்.