
கலைஞர் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் 161 இடங்களில் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் 161 இடங்களில் கலைஞர் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெண்ணைமலை பகுதியில் உள்ள அன்பு கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

மேலும் பசுபதிபாளையம் பகுதியில் கலைஞர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பொதுமக்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது.
இதே போல் பல்வேறு இடங்களில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
