மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் கிராமத்தில், அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஇளங்காளியம்மன் கோவில் ஆடிப்பெருந்திருவிழா
கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று இரவு கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது . அருண்பிரசாத் குடும்பத்தினர் சார்பாக, பூச்சொரிதல் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டுகளை, ஏந்தி கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது.கிராம முக்கியஸ்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்று சிறப்பித்தனர். தொடர்ந்து, இளங்காளியம்மனுக்கு, பூக்களால் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இன்று இரவு முள்ளிப்பள்ளம் கிராமத்தார்கள் சார்பாக, முளைப்பாரி ஊர்வலம் மற்றும் நையாண்டி மேளம் நடைபெற உள்ளது.
சோழவந்தான் முள்ளிப்பள்ளம் இளங்காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
