தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலை உள்பட முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன் பேரில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் முக்கிய சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன.
இராஜபாளையம் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் செல்வ லட்சுமி, தேசிய நெடுஞ்சாலை துறை உதவிப் பொறியாளர் நம்பி ஆகியோர் முன்னிலையில் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன. ஜேசிபி எந்திரங்கள் மூலம்
கொடிகம்பங்கள் அகற்றப்பட்டு, கொடி மேடையும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.

இராஜபாளையம் தெற்கு சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்தனர். இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் முதல் தொடங்கி,பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை ரவுண்டானா, மற்றும் சொக்கர் கோவில், புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், சங்கரன்கோவில் முக்குவிலக்கு, பாரதி நகர், புதிய பேருந்து நிலையம், முடங்கியார் சாலை, ரயில்வே பீடர் ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.








; ?>)
; ?>)
; ?>)