கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லை, நெல்லை மாவட்டத்தின் தொடக்க பகுதியான
ரஜகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள புனித அன்னம்மாள் ஆலய திருவிழா (ஜூலை17)மாலை 6.30மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

எதிர் வரும் 25_ம்தேதி இரவு 9.30.மணிக்கு பரிசுத்த பரலோக அன்னையின் அலங்கார தேர் பவனி நடைபெறுகிறது. 10_ம் திருநாளான (ஜூலை.26)ம் தேதி பெருவிழா திருப்பலியும், பிற்பகல் 2.00_மணிக்கு, பங்கின் அனைத்து இறைமக்களும் சிறப்பிக்கின்றனர்கள். திருவிழா நிறைவு நாள் நிகழ்வுகளில் முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ், அருட்தந்தை சத்திய நேசன் (மண்ணின் மைந்தர்) ஆகியோர் பங்கேற்கின்றனர்.
அன்னை புனித அன்னமாள் ஆலய பங்கு பங்கு தந்தை ஜான்சன்ராஜ், பங்கு பேரவை தலைவர் ஏ.பி.எம்.ஜெபர்சன், செயலாளர் கிராசியஸ்,துணை செயலாளர் டெய்சிமெரிட், பொருளாளர் எட்வின், பங்கு மேய்ப்பு பணிக்குழு புனித அன்னாள் அருட் சகோதரிகள் மற்றும் பங்கு இறைமக்கள் இணைந்து விழாவின் பணிகளை மேற்கொண்டார்கள்.