• Sun. Apr 28th, 2024

சின்ன முட்டம் துறை முகத்தில் மீனவர்கள் போராட்டம்

கன்னியாகுமரியை அடுத்துள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் 400_க்கும் அதிகமான இயந்திரப் படகுகள். இதனை நம்பி 1000_க்கு அதிகமான நேரடி மீன்பிடி தொழிலாளர்களும் ,ஆண் பெண் என 500_க்கு அதிகமான மறைமுக வேலைவாய்ப்பு பெறுகிறார்கள் என்பதை கடந்து இயந்திர படகுகள் கடலுக்கு போய் வரும் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் புழக்கத்தில் இருக்கும் உள்ளது.கடந்த மூன்று மாதங்களாக மீனவர்கள் ஆழ் கடல் மீன் பிடிக்க செல்லமீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததுடன்.அதிகாலை கடல் தொழிலுக்கு செல்லும் அனைத்து இயந்திர படகுகள் இரவு 9மணிக்குள் கரைக்கு வந்து விட வேண்டும் மேலும் வாழை வகை மீன்களை பிடித்து வரக்கூடாது என்ற தடைஉள்ளது.


சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 400_படகுகளும் கடந்த 3_மாதங்களாக கடலுக்கு செல்லாத நிலையால் மீனவ தொழிலாளர் குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றனர். எனவே கடலுக்கு செல்ல மீன்வளத்துறை டேக்கன் தரவேண்டும் என சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த 7மீனவ அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மீன்வளத்துறை உதவி இயக்குநர் விர்ஜில்கிராஸ் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர் .
மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரி, காவல்துறை அதிகாரி என 5_மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தையில் சரியான முடிவுக்கு அதிகாரி வரத நிலையில் ஏழு சங்க தலைவர்களும் உறுப்பினர்களும்.மீன்துறை அலுவலக தலை வாசலில் கண்டன கோசத்துடன் போராட்டம் நடத்திய நிலையில்.காவல்துறை அதிகாரி நடத்திய பேச்சு வார்த்தையில் மீனவ அமைப்பினரிடம் இரண்டு நாட்கள் அவகாசம் தாருங்கள்.உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்ற உத்தரவாதம் அடிப்படையில் மீனவர்கள் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *