• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பெண் மாணவ மாணவியர்க்கு தொழில் முனைவோருக்கான முதல் சுற்று தேர்வு நிகழ்ச்சி

Byஜெ.துரை

Feb 15, 2023

சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லுரியில் தொழில் முனைவோர்கான கருத்தரங்கம் நடைப்பெற்றது.
இந்த ஆலோசனை கருத்தரங்கில் சுமார் 90 க்கும் மேற்பட்ட தொழில் தொடங்கும் கருத்துக்களை 5 பேர் கொண்ட குழுக்களாக 300க்கும் மேற்பட்ட மாணவ தொழில் முனைவர்கள். தங்கள் வணிக யோசனையை முன்வைத்தனர்.


இந்த கருத்தரங்கை வெள்ளிவெஞ்சர்ஸ் என்னும் தனியார் நிறுவனம் மற்றும் அண்ணா யுனிவர்சிட்டியுடன் ஸ்டார்ட்ப் தமிழ் என்ற நிகழ்ச்சி மூலம் ஐ.சி.சி.டி.எஃப் என்ற தனியார் என்.ஜி. ஓ.அமைப்பினர் ஒருங்கிணைத்து நடத்தினர்.
இந்த கருத்தரங்கில் அண்ணா பல்கலை கழக பேரசிரியர் டாக்டர் ரவிக்குமார், முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக வெள்ளி வென்ச்சர் நிறுவன தலைவர் டாக்டர் சர்மிளா நாகராஜன், ஜோஸ் வர்கீஸ், டாக்டர் R குமார் டாக்டர் சாய்குமாரி, புருஷோத்தமன் மற்றும் விழா ஒருங்கினைப்பாளர் நான்ஸி,ஷில்பா மற்றும் கல்லுரியின் பெண் மாணவ மாணவியர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.