பழனி அருகே கோதமங்கலம் ,வையாபுரி குளம் , புதுக்குளம் உள்ளிட்ட குளங்களில் சுமார் 2700 மீனவர்கள் மீனவர் கூட்டுறவு சொசைட்டி மூலம் பதிவு செய்யப்பட்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்து எந்த குளத்தை தேர்ந்தெடுக்கிறார்களோ அந்த குலத்திற்கு அனுமதி வழங்குவதற்கான டோக்கனை மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் வழங்கப்பட வேண்டிய நிலையில் மீனவர் கூட்டுறவு சொசைட்டி அதிகாரிகள் தங்களுக்கு தேவைப்பட்ட நபர்களுக்கு மட்டும் கேட்கும் குளத்தில் மீன் பிடிக்க அனுமதி தருவதாகவும் ,இதனால் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் அதிகம் வரத்து இல்லாத பகுதியில் மீன் பிடிக்க அனுமதி கொடுக்கும் அதிகாரிகளை கண்டித்து இன்று மீனவர் கூட்டுறவு சொசைட்டி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக உயர் அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.











; ?>)
; ?>)
; ?>)