கன்னியாகுமரியை அடுத்துள்ள சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர்,வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் மீன்பிடி தொழில் ஈடுபட்டுள்ளார்கள்.
இன்றும் அதிகாலை எப்போதும் போல் மீன்பிடி இயந்திர படகுகள் கடலுக்கு செல்ல தயாராக இருந்த போது.
தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலை சேர்ந்த செல்வம் ( 55) சின்முட்டம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக கடலில் தவறி விழுந்து இறந்தார். இதனால் சின்ன முட்டம் துறைமுகத்திலிருந்து எந்த விசைப்படகும் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.

கடலில் வீழ்ந்து மரணம் அடைந்த செல்வத்தின் பூத உடலை கைப்பற்றிய கன்னியாகுமரி காவல்துறை மீனவர் மரணம் பற்றிய வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கிய நிலையில். மீனவரது உடலை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் கூறு ஆய்விற்காக எடுத்து சென்றனர்.
எப்போதும் அதிகாலை நேரத்தில் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகம்
பரபரப்பான சூழலில் இருக்கும் இன்று மீனவனின் எதிர் பாராத மரணம் அந்த பகுதியில் ஒரு சோகமான நிலையை ஏற்படுத்தியது.