• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல்முறையாக போனஸ் அறிவிப்பு

Byவிஷா

Oct 29, 2024

மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு முதல்முறையாக போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி 11 ஆண்டுகளை கடந்த நிலையில், இந்த ஆண்டு மெட்ரோ ஊழியர் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தலா ரூ. 15000 போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் சங்கம் சார்பில் சிஐடியூ, சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு முதல்முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயிலில் Non – Executive பணியாளர்களுக்கு 15,000 ரூபாய் போனஸ் வழப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.