• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வேளாண் பல்கலைக்கழகத்தில் இன்று முதல் மாணவர் சேர்க்கை!

By

Sep 8, 2021 ,

கோவையில் உள்ள அனைத்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் மூலமாக 11 இளநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 8ம் தேதி முதல் இணையம் மூலமாக விண்ணப்பங்கள் பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசின் அறிவிப்பின் படி ,இந்த கல்வியாண்டு முதல் வேளாண்மை, தோட்டக்கலை பட்டப் படிப்புகள் தமிழ் வழியிலும் பயிற்றுவிக்கப்பட உள்ளதாக அறிவித்தது. கோவை வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம், கோவை தோட்டக்கலைக் கல்லூரி போன்ற நிலையங்களில் தமிழ் வழி படிப்புகள் நடத்தப்பட உள்ளன.

மேலும், நடப்பு கல்வியாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தோட்டக்கலைக் கல்லூரி, கரூர், நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர், சிவகங்கை மாவட்டத்தில் செட்டிநாடு ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டுள்ள 3 வேளாண்மைக் கல்லூரிகளும் மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதாக மாணவர் சேர்க்கைப் பிரிவு தலைவர் கல்யாணசுந்தரம் அறிவித்துள்ளார்.