• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சேலத்தில் முதல் உதவி சிகிச்சை விழிப்புணர்வு நிகழ்ச்சி…

ஒவ்வொரு ஆண்டும் உலக காயத்தடுப்பு மற்றும் மேலாண்மை தினம் அக்டோபர் 17-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் காயத்தடுப்பு மற்றும் மேலாண்மை தினத்தை ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சாலை விபத்து, தீ விபத்து, கட்டட இடுபாடு மற்றும் பிற விபத்துகளால் உடற்காயங்கள், எலும்பு முறிவு, கை, கால்கள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றது.

சில சமயங்களில் உயிர் இழப்புகளும் ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொது இடங்களில் விபத்துக்கள் ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சை ஒத்திகையினை மருத்துவர்கள் செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் விபத்துகளால் பாதிக்கப்பட்டவரை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

முன்னதாக, காயத்தடுப்பு மற்றும் மேலாண்மை தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தப் பேரணிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவ மாணவர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.