காஞ்சிபுரம் பாலாற்றில் மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் சிக்கித் தவித்த 7 காளை மாடுகளை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களாக தீவிரமடைந்துள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு நீர்நிலைகள் விறுவிறுவென நிரம்பி வருகின்றன. இந்நிலையில் செவிலிமேடு பகுதியில் பாலாற்றில் 7 காளை மாடுகள் நீரில் மாட்டிக்கொண்டு வெளியேற முடியாமல் தத்தளித்து.
இதையடுத்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் பாலாற்றில் இறங்கி தத்தளித்துக் கொண்டிருந்த ஏழு காளைகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
பல்வேறு முயறசிகளுக்கு பிறகு அவர்கள் மாடுகளை மீட்ட சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.